பழம்பெரும் நடிகரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Saturday,January 04 2020]

பழம்பெரும் நடிகர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை அவரது மகளே தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பழம்பெரும் நடிகரும் நடிகவேள் என்ற பட்டத்தை பெற்றவருமான எம்ஆர் ராதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகளும் பிரபல நடிகையுமான ராதிகா தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எம்ஆர் ராதா கடந்த 50 மற்றும் 60களில் ஹீரோ, வில்லன், காமெடியன் என பல்வேறு வேடங்களில் நடித்து அசத்தியவர். மேலும் தந்தை பெரியாரால் நடிப்பில் ஈர்க்கப்பட்டு அவர் கொடுத்த ’நடிக வேள்’ என்ற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வகையில் பல சமூக கருத்துக்களை 50 ஆண்டுகளுக்கு முன்பே பல திரைப்படங்களில் கூறியவர் எம்ஆர் ராதா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எம்ஆர் ராதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை அவரது மகள் நடிகை ராதிகா தனது ராடன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். எம்ஆர் ராதாவின் பேரன் Lke இந்த படத்தை இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அட்லி தயாரித்த ‘சங்கிலி புங்கிலி கதவ திற’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஆர்.ராதாவின் பேரனாக மட்டுமின்றி ஒரு ரசிகனாக அவருடைய புதிய இன்னொரு முகத்தை இந்த படத்தில் காட்டவிருப்பதாகவும் எம்.ஆர்.ராதா குறித்து யாரும் தெரியாத பல விஷயங்களை தொகுத்து வைத்திருப்பதாகவும், அவை படம் பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும் என்றும் இயக்குனர் Lke கூறுகிறார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் கைது! திருச்சியில் பயங்கரம்

11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவி ஒருவரை அவரது காதலரே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மனைவியின் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்த கணவன்: அதன்பின் நடந்த விபரீதம்

சென்னை அனகாபுத்தூர் பகுதியை பகுதியில் மனைவியின் கள்ளக்காதலனை தந்திரமாக வீட்டுக்கு வரவழைத்து கணவன், மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

70 வயதிலும் எனர்ஜியாக இருக்க 'குறைவு'தான் காரணம்: தர்பார் விழாவில் ரஜினி

70 வயதில் எனர்ஜியாக இருக்க என்ன காரணம் என்பதை நேற்று நடந்த 'தர்பார்' படத்தின் பிரமோஷன் விழாவில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்

'தர்பார்' படத்திற்கு தடையா? சென்னை ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

4 நடிகைகளின் படுக்கையறை, குளியலறை காட்சிகள்: விஜய்தேவரகொண்டா படத்தின் டிரைலர்

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் டிரைலர் சற்றுமுன் ரிலீசாகியுள்ளது. இந்த டிரைலரில் 4 நடிகைகளின் படுக்கையறை மற்றும் குளியலறை காட்சிகள் இருப்பதால் பயங்கர வைரலாகி வருகிறது