close
Choose your channels

நடுக்கடலில் சொகுசு படகு.. கையில் சரக்கு.. பிறந்த நாளை கொண்டாடும் ராய் லட்சுமி..!

Saturday, May 3, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராய் லட்சுமி இன்னும் இரண்டு நாளில் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில், நடுக்கடலில் சொகுசு படகில் கையில் சரக்குடன் இருக்கும் புகைப்பட தொகுப்புகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘கற்க கசடற’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ராய் லட்சுமி, அதன் பின்னர் ’தர்மபுரி’, ’நெஞ்சை தொடு’, ’வெள்ளித்திரை’, ’ரகசிய சினேகிதனே’, ’முத்திரை’, ’நான் அவன் இல்லை 2’, ’இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான ’டிஎன்ஏ’ என்ற மலையாளப் படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, சற்றுமுன் நடுக்கடலில் சொகுசு படகில் எடுத்த விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். நாளை மறுநாள் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில், இன்று முதல் தான் கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டார் என ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment