பிரபல இயக்குனரை 2வது திருமணம் செய்கிறாரா பிக்பாஸ் ரக்‌ஷிதா .. அப்ப ராபர்ட் மாஸ்டர் என்ன ஆச்சு..?

  • IndiaGlitz, [Monday,May 01 2023]

சீரியல் நடிகையும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரக்‌ஷிதா, இயக்குனர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ய போவதாக வதந்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ரக்‌ஷிதா ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமானார் என்பது அதன் பிறகு ’சரவணன் மீனாட்சி’ உள்பட ஒரு சில சீரியலில் நடித்தார் என்பது தெரிந்தது. மேலும் இவ்வாறு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரக்‌ஷிதா அந்த நிகழ்ச்சியில் 91 நாட்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடினார். மேலும் இந்த நிகழ்ச்சியின்போது ராபர்ட் மாஸ்டர் உடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் அதன் பிறகு இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் ரக்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் ராபர்ட் மாஸ்டரை ஒரு நல்ல நண்பராக தான் ஏற்றுக் கொண்டதாக கூறி காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் நடிகர் ரக்‌ஷிதா, தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தற்போது பிரிந்து இருப்பதாகவும் விரைவில் முறைப்படி விவாகரத்து பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் ரக்‌ஷிதா சீரியல் இயக்குனர் ஒருவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்ய போவதாகவும் ஒரு வதந்தி திரையுலக வட்டாரங்களில் பரவி வருகிறது. இந்த வதந்தி உண்மையா? அல்லது வதந்தியாகவே இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரஜினி, கமல் படங்களின் 80களின் நாயகி.. மகனுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த கடந்த 80களின் நாயகி குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் ரயிலாகி வருகிறது.

மீண்டும் இணையும் ஜெயம் ரவி - கார்த்தி.. ஆனால் இம்முறை வேற லெவல்..!

கார்த்தி மற்றும் ஜெயம் ரவி இணைந்து நடித்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 

வடிவேலு கையில் துப்பாக்கி.. உதயநிதி கையில் வாள்.. 'மாமன்னன்' படத்தின் மாஸ் போஸ்டர்..!

 உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்தோம். 

நள்ளிரவில் சர்ப்ரைஸ் ஆக வந்த 'ஏகே 62' டைட்டில்.. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நள்ளிரவு 12 மணிக்கு வெளியானதை அடுத்து அஜித் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக உள்ளது. 

'வெந்து தணிந்தது காடு 2': சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்..!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம்