close
Choose your channels

பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்… வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Monday, October 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, இந்தி எனப்பல மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம்வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் நேற்று தனது 30 ஆவது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார். மேலும் இந்த நாளில் இந்தி சினிமாவில் நடிகர், தயாரிப்பாளராக வலம்வரும் ஜாக்கி பக்னானியுடனான தனது காதலை தெரியப்படுத்தும் வண்ணம் நடிகை ரகுல் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவையடுத்து நடிகை ரகுல்- நடிகர் ஜாக்கி பக்னானிக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழில் “தடையறத் தாக்க“ எனும் திரைப்படத்தில் அறிமுகமான இவர், நடிகர் சூர்யாவுடன் “NGK“, நடிகர் கார்த்திக்குடன் “தீரன் அதிகாரம் ஒன்று“, “தேவ்“, “ஸ்டைர்“, “என்னமோ ஏதோ“ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் “அயலான்“, நடிகர் கமலுடன் “இந்தியன்2“ படத்திலும் இணைந்திருக்கிறார். இந்நிலையில் “Yariyan“ எனும் பாலிவுட் சினிமாவில் இணைந்து நடித்துவரும் இவர் அந்தப் படக்குழுவுடன் உற்சாகமாக தனது பிறந்தநாளை கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொண்டாட்டத்திற்கு இடையே நடிகர் ஜாக்கி பக்னானி “நீயின்றி, நாட்கள் நாட்களாக இல்லை. நீயின்றி மிகவும் சுவையான உணவுகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. எனக்கு மிகவும் முக்கியமான மிக அழகான ஒரு ஆன்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். உன் புன்னகையைப் போலவே இந்த நாளும் உனக்கு மிகவும் பிரகாசமாகவும் உன்னைப் போல அழகாகவும் இருக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே“ என நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்தப் பதிவிற்கு நன்றி தெரிவித்த நடிகை ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நன்றி என் லவ். நீதான் இந்த ஆண்டு எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெரிய பரிசு. என் வாழ்க்கையை அழகாக்கியதற்கு என்னைத் தொடர்ந்து சிரிக்க வைப்பதற்கு நீ நீயாக இருப்பதற்கு நன்றி“ எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைத் தொடர்ந்து நடிகை ரகுல் மற்றும் ஜாக்கி பக்னானி ஆகிய இருவருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். தமிழில் த்ரிஷா நடிப்பில் வெளியான “மோகினி“ படத்தில் ஜாக்கி பாக்நானி நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.