close
Choose your channels

பெண்களே ஒரு மேஜிக்தான்… மகளிர் தினத்தில் இளம் நடிகையின் வைரல் கருத்து!

Monday, March 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தற்போது ஒரு சில இந்தி படங்களில் நடித்து வருகிறார். அதோடு வொர்க் அவுட், யோகா போன்றவற்றிலும் அதிக ஆர்வம் கொண்ட நடிகை ரகுல் எப்போதும் அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இவர் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாவில் தனது கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில், “ஒரு பெண் இருக்கும் இடத்தில் மேஜிக் இருக்கிறது. நீங்கள் அனைவரும் அழகான, வலுவான, கடுமையான சுதந்திரமான பெண்கள். உங்களுக்கு எனது இனிய மகளிர் தின வாழ்த்துகள் எனத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தமிழில் நடிகர் கார்த்திக்குடன் “தீரன் அதிகாரம் ஒன்று” “தேவ்” உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். அடுத்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து “என்ஜிகே” வில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த அயலான் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் “இந்தியன் 2” விலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “மே டே” படத்தின் படப்பில் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.