46 வயதில் எப்படி இருக்காங்க பாருங்க ரம்பா? பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ!

  • IndiaGlitz, [Monday,June 06 2022]

நடிகை ரம்பா தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

90களில் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூன் 5ஆம் தேதி ரம்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் கேக் வெட்டி ரம்பா பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரம்பாவின் கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவுக்கு ’46 வயதிலும் ரம்பா எப்படி அழகாக இருக்கிறார் பாருங்கள்’ போன்ற கமெண்ட்ஸ்கள் அதிகம் பதிவாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

கமல்ஹாசனின் 'விக்ரம்': எதிர்பார்த்தது ரூ.100 கோடி, ஆனால் வசூல் எவ்வளவு தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் ஆகும்

அருள்நிதியுடன் 'சார்பாட்டா பரம்பரை' நாயகி: இவர் தான் இயக்குனர்!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதியின் அடுத்த படத்தில் 'சார்பட்டா பரம்பரை' நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம்: ஒரே ஒரு காரணம் சொன்ன ஜொனிதா காந்தி

பாடகி ஜொனிதா காந்தி இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக 'விஸ்வாசம்' அனிகா: 'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த டெலிவரி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதிய காதலருடன் நெருக்கம்: ரஜினி, விஜய் பட நடிகையின் வைரல் புகைப்படம்

ரஜினி, விஜய், தனுஷ் படங்களில் நடித்த நடிகை, தனது புதிய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.