close
Choose your channels

பிரபல தமிழ் கதாநாயகி விவாகரத்து மனு தாக்கல்

Tuesday, October 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கிய 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கவர்ச்சி நடிகை ரம்பா அதன் பின்னர் ரஜினிகாந்த், விஜய், அஜித், பிரபுதேவா,சரத்குமார் உள்ளிட்ட பிரபல நாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் அவர்களை திருமணம் செய்து கனடாவில் செட்டில் ஆனார். இந்நிலையில் நடிகை ரம்பா விவாகரத்து கோரி இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ரம்பா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். ரம்பா-இந்திரன் தம்பதிக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.