பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இந்த பிரபல நடிகையா?

  • IndiaGlitz, [Friday,November 26 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசனுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் சனி, ஞாயிறில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதில் யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல்ஹாசனே மருத்துவமனையிலிருந்து தொகுத்து வழங்குவாரா? அல்லது அவருக்கு பதில் வேறு யாரேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு சில வாரங்களுக்கு தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் டிவியில் உள்ள ஒருசில நிகழ்ச்சிகளுக்கு ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருந்த அனுபவம் உள்ளது என்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இருப்பினும் விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக நாளை மறுநாள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்பதை அறிவிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ராம்கோபால் வர்மாவின் அடுத்த படத்தில் தற்காப்பு கலை வீராங்கனை: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா அவர்கள் இடையில் சில காலம் தனது சொந்த ஓட்டி தளத்திற்காக கவர்ச்சி படங்களை இயக்கினார் என்பதும் அந்த படங்கள் மிகப்பெரிய அளவில்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அட்டகாசமான 'உயிரே' பாடல்

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது

சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் போட்டோஷூட்டில் கலக்கிய ரம்யா பாண்டியன்!

தமிழ் திரையுலகின் நடிகையும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்

ஏ.ஆர்.ரஹ்மான் டியூனுக்கு பாடல் எழுதிய பிரபல இயக்குனர்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் கம்போஸ் செய்த டியூனுக்கு ஒரு பாடலை எழுதியதாக பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மிகுந்த பரவசத்துடன் தெரிவித்துள்ளார் 

எஸ்ஜே.சூர்யா வேடத்தில் நடிக்க இருந்தவர் இந்த நடிகரா? 'மாநாடு' இயக்குனரின் ஆச்சரியமான தகவல்

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிய 'மாநாடு' திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று ரிலீசானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது