ரம்யா நம்பீசனின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ: இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Thursday,August 18 2022]

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ரம்யா நம்பீசன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகை ரம்யா நம்பீசன் கடந்த 2005ஆம் ஆண்டு ’ஒரு நாள் ஒரு கனவு’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ’ராமன் தேடிய சீதை’ ’ஆட்டநாயகன்’ ’நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ ’சேதுபதி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ஆறு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா நம்பீசனுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சற்று முன் ரம்யா நம்பீசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், ‘ஜிம்முக்கு செல்வது, கொழுப்பை குறைப்பது என்பது மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக அல்ல என்றும் என்னுடைய ஆத்மதிருப்திக்காக என்றும் வொர்க்-அவுட் செய்வதால் வெளிவரும் வியர்வை ஆனந்தத்திற்கு வழிவகுத்தது’ என்றும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

More News

உலகப்புகழ் பெற்ற கிஸ் வால் முன் நயன் - விக்கி: எப்படி முத்தம் கொடுக்குறாங்க பாருங்க!

 ஸ்பெயின் நாட்டில் உள்ள உலக புகழ்பெற்ற கிஸ் வால் முன் நயன் மற்றும் விக்கி முத்தம் கொடுப்பது போன்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த பட டைட்டில் இதுவா? நாயகி, இயக்குனர் தகவல் இதோ!

 ஆர்ஜே பாலாஜி நடித்த 'வீட்ல விசேஷம்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் மறைவு: பிரபலங்கள் இரங்கல்!

தமிழ் கடல் என்று அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 77.

தாய்க்கிழவி பாடலுக்கு ரசிகர்கள் ஆட்டம்: சென்னை திரையரங்கில் ஸ்க்ரீன் கிழிந்ததால் பரபரப்பு

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இன்று வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருவதால்

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு: அரசின் அதிரடி அறிவிப்பு!

நாளுக்கு நாள் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருவதை அடுத்து 10 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு அளிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளது