close
Choose your channels

சிம்பு, தனுஷ் பட நாயகி கர்ப்பம்: மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்!

Sunday, February 28, 2021 • தமிழ் Comments

சிம்பு நடித்த ’ஒஸ்தி’ தனுஷ் நடித்த ’மயக்கமென்ன’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத் என்பதும், இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் ரிலீஸானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ரிச்சா ஒருசில தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜோ லங்கேலா என்ற தனது பள்ளி கால நண்பரை ரிச்சா திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும் வரும் ஜூன் மாதம் குழந்தை பிறக்க இருப்பதாகவும் ரிச்சா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

மேலும் தனது கணவர் தனக்கு முத்தமிட்ட புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz