close
Choose your channels

டான்ஸ் ஆடிக்கொண்டே ஒர்க்-அவுட் செய்யும் ரித்திகாசிங்: வைரல் வீடியோ

Friday, June 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் தமிழ் திரையுலகில் மாதவன் நடித்த ’இறுதிச்சுற்று’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து அவர், ‘ஆண்டவன் கட்டளை’ ’சிவலிங்கா’ ’ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அவர் ’பிச்சைக்காரன் 2’, ‘பாக்சர்’ மற்றும் ’வணங்காமுடி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரித்திகா சிங்கிற்கு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ரித்திகா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் டான்ஸ் ஆடிக் கொண்டே ஒர்க்-அவுட் செய்யும் காட்சிகள் உள்ளன. இசையை கேட்டுக்கொண்டு, டான்ஸ் ஆடிக்கொண்டு ஒர்க்-அவுட் செய்வது தனக்கு பிடித்துள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.