இளம் தமிழ் நடிகருக்கு ஜோடியாகும் அமைச்சர் ரோஜா மகள்?

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் மகள் இளம் தமிழ் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ரோஜா என்பதும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா நகரி தொகுதியில் தொடர்ச்சியாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தற்போது அவர் ஆந்திராவின் அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா என்பவர் தெலுங்கு திரையுலகில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக அன்ஷூ மாலிகா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர் அன்ஷூவை கதாநாயகியாக நடிக்க வைக்க தன்னிடம் அணுகியதாக ரோஜா கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் படிப்பை முடித்த அன்ஷூ, தற்போது நடிப்பு பயிற்சி பெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

More News

இவங்களுக்கு கல்யாணம் ஆவறதுக்குள்ள சிம்பு- விஷாலுக்கும் கல்யாணம் ஆகிடும்போல..  'காபி வித் காதல்' டிரைலர்

 சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'காபி வித் காதல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் 7ஆம்  தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில்

மாறுவேடத்தில் ஒரு தேவதை.. மகளை வர்ணித்த யாஷின் க்யூட் வீடியோ!

'கேஜிஎஃப்' மற்றும் 'கேஜிஃஎப் 2' ஆகிய திரைப்படங்களின்  மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் யாஷ் சற்று முன் தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

அஜித்தின் 'துணிவு' படத்துடன் கனெக்சன் ஆன உதயநிதியின் 'மாமன்னன்'

அஜித்தின் 'துணிவு' படத்துடன் உதயநிதியின் 'மாமன்னன்'திரைப்படம் கனெக்சன் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அவங்க ஒரு டேமேஜ் ஹீரோயின்: 'காபி வித் காதல்' நடிகையை கேலி செய்த சுந்தர் சி

சுந்தர் சி இயக்கிய 'காபி வித் காதல்' திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

மீண்டும் கார்த்தியுடன் இணையும் பிரபல நடிகை .. இயக்குனர் இவர் தான்!

நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த நிலையில் தற்போது மீண்டும் கார்த்தி - ராஷ்மிகா மந்தனா ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக