close
Choose your channels

காமெடி நடிகர் வீட்டு திருமண விழாவில் ரோஜா.. பிரபல நடிகருடன் எதிர்பாராத சந்திப்பு!

Tuesday, November 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதி ரோஜா சமீபத்தில் காமெடி நடிகர் ஒருவரின் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டபோது அங்கு எதிர்பாராத வகையில் நாகார்ஜுனா மற்றும் அமலா தம்பதியை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான அலி என்பவரது மகள் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா கலந்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திருமண விழாவில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் அமலாவும் கலந்து கொண்ட நிலையில் ரோஜா-நாகார்ஜூன் து சந்தித்த புகைப் படங்களும் வைரலாகி வருகின்றன. நடிகர் நாகார்ஜுனா மற்றும் ரோஜா ஆகிய இருவரும் இணைந்து பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமண விழாவில் கலந்து கொண்டது குறித்து நடிகை ரோஜா கூறியபோது, ‘இன்று நடிகர் மாநில மின்னணு ஊடக ஆலோசகர் அலி அவர்களின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டேன். திருமண விழாவில் அன்பு நண்பர் அக்கினேனி நாகார்ஜுனா அமலா தம்பதியரை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.