close
Choose your channels

பறையிசையில் பட்டையை கிளப்பிய நடிகை ரோஜா: வைரல் வீடியோ

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகில் கடந்த 90கள் மற்றும் 2000களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, தற்போது ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றபோது பறை இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பறை இசையை இசைத்து பட்டையை கிளப்பிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை ரோஜா தனது தொகுதியான நகரி பகுதிக்கு அடிக்கடி சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிவார் என்பதும் நலத்திட்ட உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் சொந்த தொகுதி செல்லும்போதெல்லாம் சைக்கிளில் செல்வது, மோட்டார் பைக் ஓட்டுவது உள்பட பல்வேறு அதிரடிகளை அவர் செய்வதால் அவர் அந்த தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது நகரி தொகுதியில் பறை இசைக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பறை இசைக் கலைஞர்களின் இசையை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவரே பறை இசையை இசைக்க தொடங்கினார். அவரது பட்டையை கிளப்பும் பறை இசை குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz