பிரபல நடிகை வெற்றி! அமைச்சராகவும் வாய்ப்பு!

  • IndiaGlitz, [Thursday,May 23 2019]

மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்த மாநிலங்களில் ஒன்று ஆந்திர பிரதேசம். இந்த மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேச கட்சி மக்களவை மற்றும் சட்டமன்றம் என இரண்டு தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 141 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை பெற்றிருப்பதால் ஜெகன்மோகன்ரெட்டி முதல்முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகிறார்.

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் தமிழ், தெலுங்கு பட நடிகையுமான ரோஜா நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே அதே தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே பல்வேறு போராட்டங்களை முன்னிலையில் இருந்து நடத்தியுள்ளதால் இவருக்கு ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான அரசில் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

இந்தியா மீண்டும் வென்றுவிட்டது. பிரதமர் மோடி டுவீட்

மக்களவை தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதலே பாஜகவுக்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு

திருமணத்திற்கு பின் ஆர்யா-சாயிஷா எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின் முதல்முறையாக ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 

பிரதமர் மோடிக்கு கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து!

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக மீண்டும் பதவியேற்க தனது வாழ்த்துக்கள் என தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாதித்துவிட்டீர்கள்: பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை தனித்தே பெற்றுவிட்டது.

நான் எவ்வளவு ஓட்டு முன்னிலையில் உள்ளேன்? சன்னிலியோன் கேள்வி

மக்களவை தேர்தலில் போட்டியிடாத நடிகை சன்னிலியோன் தான் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளேன் என்று கேள்வி கேட்டிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.