close
Choose your channels

சமந்தாவின் போட்டியாளர்கள் யார் யார்? அவரே அளித்த பதில்

Sunday, May 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்யின் 'தெறி', சூர்யாவின் '24' என அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களின் நாயகியான சமந்தா, அடுத்து தனுஷுடன் 'வடசென்னை' படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கடும் வெயில் காரணமாக தற்காலிகமாக படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் சமந்தா சமீபத்தில் சமூகவலைத்தளம் ஒன்றில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர் கூறியபோது, 'நான் நடித்த படத்தின் வெற்றியும், எனது படத்தின் நல்ல விமர்சனமும் எனக்கு பிடிக்கும். எப்போதுமே வெற்றி பெற்று கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பேன். எனக்கு போட்டி என்றால் மிகவும் பிடிக்கும். போட்டி இருந்தால்தான் எனக்கு உத்வேகமும் அதிகரிக்கும். ஆனால் என்னுடன் போட்டியிடுபவர்களின் பெயர்கள் மாறிக்கொண்டே இருப்பதால் குறிப்பிட்ட ஒருவரை நான் போட்டியாளராக கருதவில்லை.
என் வாழ்க்கையின் வெற்றி ரகசியம் எனது கடின உழைப்புதான். எனக்கு கிடைக்கும் வெற்றிகளினால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன்.
தமிழக இளைஞர்கள் அனைவரும் பெரிதாக கனவு காண வேண்டும். சவால்களை ஏற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறிய சமந்தா, தேர்தல் குறித்த கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் 'தயவுசெய்து அனைவரும் ஓட்டு போடுங்கள்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.