ஜிலேபி கொடுத்த நபர் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த சமந்தா: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,November 12 2022]

நடிகை சமந்தா தனக்கு ஜிலேபி குறித்த நபர் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரலாகி வருகின்றன.

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் இருந்து குணமாக போராடி வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார். இந்த பதிவை அடுத்து அவர் விரைவில் குணமாக ரசிகர்கள், திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் சமந்தா நடித்த ’யசோதா’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு திருப்தி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ஜிம் பயிற்சியாளர் குறித்து ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து உள்ளார். எனக்கு பிடித்த ஜிலேபிக்கு தகுதியான அளவுக்கு நான் ஒர்க் அவுட் செய்தேன் என்று எனது பயிற்சியாளர் ஜுனைத் ஷேக் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அவர் யசோதாவின் வெற்றியை கொண்டாடுவதற்காக அந்த படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சியை நினைத்து பெருமைப் பட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்து ஜிலேபி கொடுத்தார்.

கடந்த சில மாதங்களாக அவர் என்னுடன் இருந்ததால்தான் இதையெல்லாம் என்னால் செய்ய முடிந்தது. அவர் எனக்கு மிகவும் ஊக்கமளித்து இடைவிடாத ஆதரவளித்தார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் சமந்தா தனது உடல் எடை குறைந்த தகவல்களையும், தனது கைக்கு பயிற்சி அளித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

More News

சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது: ரஜினியை சந்தித்த 'லவ் டுடே' இயக்குனரின் பதிவு

 சூரியனுக்கு அருகே இருப்பது போல் இருந்தது என சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்த பின்னர் 'லவ்டுடே' இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நல்லவர் என்ற முகமூடி அணிந்திருப்பவர் யார்? மணிகண்டன் பதிலை கேட்டு ஆச்சரியமடைந்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பதும், போட்டியாளர்கள் தற்போது தங்களது உண்மையான முகத்தை

'ஜப்பான்' நான் இயக்க இருந்த படம்: பிரபல இயக்குனரின் பதிவு!

கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படத்திற்கு 'ஜப்பான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும்

விஜய் பட நடிகைக்கு பெண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!

தளபதி விஜய் நடித்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு மாதம் கூட ஆகவில்லை , அதற்குள் ஓடிடி ரிலீஸா? கார்த்தியின் அதிரடி அறிவிப்பு!

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான 'சர்தார்' திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி ரிலீசானது. இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பு