நடிகை சமந்தா லைக் செய்த வீடியோ.. விவாகரத்துக்கான காரணத்தை கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை சமந்தா வைரலாகி வரும் வீடியோவுக்கு லைக் செய்த நிலையில் அவரது வாழ்வில் நடந்த விவாகரத்துக்கு அந்த வீடியோவில் கூறப்பட்ட காரணமாகத்தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் இணையை பிரிவதற்கான காரணம் என்ன என்பதை குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
ஒரு பெண் நோயால் பாதிக்கப்படும் போது, ஆண்கள் அவர்களை பெரும்பாலும் விட்டு செல்லும் வாய்ப்பு 624% அதிகம். அதே நேரத்தில், பெரும்பாலான பெண்கள் தங்களது கணவர்கள் நோய்வாய்ப்படும் போது அவர்களை பார்த்துக் கொண்டு துணையாக இருக்கின்றனர். ஏன் இது நடக்கிறது?
பல ஆண்கள், அவர்களின் துணை உயிருக்காக போராடி கொண்டிருக்கும் போதும் கூட உணர்ச்சி மற்றும் உடல் நெருக்கம் இல்லாததையே விலகும் காரணமாக கூறுகிறார்கள். இந்த கசப்பான உண்மை, பாலின வேறுபாடுகள், உணர்ச்சி பரிவும் மன உறுதியும் தொடர்பான ஆழ்ந்த பிரச்சனைகளை வெளிப்படுத்துகிறது.
இது பலவீனமா? சமுதாய சூழ்நிலையால் ஏற்படும் மனப்பான்மையா? அல்லது இன்னும் இருண்ட ஒன்று இருக்கிறதா? நோயின் நேரத்தில் துணையை விட்டு செல்லும் மனப்பான்மை சரியா? என்ற கேள்வியை இந்த வீடியோ முன்வைக்கிறது.
இந்த வீடியோவுக்கு நடிகை சமந்தா லைக் செய்துள்ள நிலையில் அவருடைய நோயை அறிந்து தான் ஒருவேளை நாக சைதன்யா விவாகரத்து பெற்று இருப்பாரா என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com