close
Choose your channels

தலைகீழாகத் தொங்கி வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… குவியும் லைக்ஸ்!

Friday, April 16, 2021 • தமிழ் Comments

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சமந்தா. தற்போது தமிழ் நாட்டில் இருந்து தெலுங்கு தேசத்திற்கு மருமகளாகச் சென்ற பிறகும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை என்பதோடு அல்லாமல் பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் சாம் எனும் செல்லப் பெயரால் அழைக்கப்படும் நடிகை சமந்தா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதனால் உடற்பயிற்சி, வொர்க் அவுட், தோட்டக் கலை, பேஷன் எனப் பல விஷயங்களில் ஆர்வம் காட்டும் நடிகை சமந்தா அதுகுறித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி விடுவார். அந்த வகையில் தற்போது ஒரு சேலை கொண்டு தலைகீழாகத் தொங்கும் நடிகை சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் நடிகை சமந்தா வொர்க் அவுட் செய்கிறாரா? அல்லது ஏதேனும் புது வகை யோகாவா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் ஒருசிலர் எப்படி, இவரால் பேலன்ஸ் பண்ண முடியுது? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவருடைய இந்த வொர்க் அவுட் புகைப்படத்திற்கு தற்போதுவரை ஒன்றரை லட்சம் லைக்ஸ்கள் குவிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz