close
Choose your channels

பொதுமக்களால் தாக்கப்பட்டாரா 'கோமாளி' பட நடிகை: வைரலாகும் வீடியோ

Saturday, September 5, 2020 • தமிழ் Comments

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் உடற்பயிற்சி குறித்து இவர் வெளியிடும் அனைத்து வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் பூங்கா ஒன்றில் தன்னை பொதுமக்கள் தாக்கியதாக குற்றஞ்சாட்டி ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். தன்னுடைய நண்பர்களுடன் பூங்காவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒருசிலர் தனது உடையை சுட்டிக்காட்டி ஆபாசமாக பேசியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பூங்காவில் இருந்து வெளியே போகமுடியாத வகையில் பூட்டு போடப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த ஒருவர் தன்னை தாக்க முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்யுக்தா மற்றும் பொதுமக்களிடம் விசாரணை செய்தனர். பொது இடத்தில் சம்யுக்தா நாகரீகமாக நடந்து கொள்ளவில்லை என்று ஒருசிலரும், சம்யுக்தா மீது எந்த தவறும் இல்லை என ஒருசில பொதுமக்களும் காவல்துறையினர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz