காயத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை.. அதே ஆக்ரோஷத்துடன் ஸ்டண்ட் காட்சி.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,February 25 2024]

நடிகை சம்யுக்தா கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு படத்தின் ஸ்டண்ட் காட்சியில் நடித்து கொண்டிருந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பில் காயம் அடைந்தார். அதன்பின்னர் குணமடைந்து மீண்டும் அதே ஸ்டண்ட் காட்சிகளில் ஆவேசமாக நடித்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, ‘கிரீம்’ என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் அந்த படத்தின் ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பின் போது அவரது காலில் காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து மிகுந்த கஷ்டப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில் சிகிச்சை மட்டுமின்றி மன வலிமையால் ஒரே ஆண்டில் குணமடைந்தார். அதன் பின் காயம் அடைந்த சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காயத்திலிருந்து மீண்டு வந்த சம்யுக்தா அதே ஆவேசத்துடன் நடித்த ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் பிரமாதமாக வந்துள்ளதாக கூறிய படக்குழுவினர் அந்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 1 என்று அறிவித்துள்ளனர்.

மேலும் சண்டை காட்சியின் போது காயமடைந்த காட்சி மற்றும் காயத்திற்கு பின் மீண்டு வந்து ஸ்டண்ட் காட்சியில் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ள சம்யுக்தா ’இரண்டு வருட உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

சமந்தாவை அடுத்து பிகினியில் போஸ் கொடுத்து கலக்கிய பிக்பாஸ் நடிகை..!

நடிகை சமந்தா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் பிகினி உடையில் பதிவு செய்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் இன்று பிக் பாஸ் நடிகை ஒருவர் சமந்தாவை

சிரஞ்சீவியை அடுத்து இன்னொரு தெலுங்கு பிரபலம் படத்தில் த்ரிஷா .. செகண்ட் ரவுண்ட் அமோகமா இருக்கே..!

18 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உடன் ஒரு படத்தில் நடிக்க சமீபத்தில் த்ரிஷா ஒப்பந்தமான நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் ஒரு தெலுங்கு நடிகருடன் த்ரிஷா

45ல் இருந்து டீன் - ஏஜ்க்கு மாறிய ஜோதிகா.. அசத்தல் போட்டோஷூட்..!

நடிகை ஜோதிகா சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களில் அவரை பார்க்கும்போது டீன் ஏஜ் பெண்

சொல்ல வார்த்தையே இல்லை.. தாஜ்மஹால் முன் யோகா செய்யும் தமிழ் நடிகை.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரைப்பட நடிகை தாஜ்மஹால் முன் யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு 'சொல்ல வார்த்தையே இல்லை'

இந்த முறை ரொமான்ஸ் எல்லாம் கிடையாது.. முழுக்க முழுக்க ஆக்சன் தான்: எஸ்ஜே சூர்யாவின் புதிய முயற்சி..!

ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என்று போற்றப்படும் எஸ்ஜே சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.