close
Choose your channels

சர்ச்சைக்குரிய புகைப்படங்களுக்கு சஞ்சிதா ஷெட்டி விளக்கம்

Saturday, March 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் மற்றும் அவருடைய மொபைல் போன் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் பிரபல கோலிவுட் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் எந்த அளவுக்கு உண்மை? மார்பிங்கா? அல்லது உண்மையா? என்று தெரியாத நிலையில் லீக் செய்யப்பட்டவர்களில் ஒருவராகிய 'சூதுகவ்வும்' புகழ் நடிகை சஞ்சிதா ஷெட்டி தற்போது விளக்கம் அளித்துள்ளார்
நேற்று முதல் தன்னை பற்றிய சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும், இதுகுறித்து தன்னுடைய அன்பான ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கடமை தனக்கு இருப்பதாகவும் கூறிய சஞ்சிதா, 'அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை' என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து தனக்கு ஆதரவு அளித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தனது நன்றிகள் என்றும் சஞ்சிதா ஷெட்டி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.