close
Choose your channels

'காற்றின் மொழி' பட நடிகை கர்ப்பம்: ரசிகர்கள் வாழ்த்து

Wednesday, February 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படத்தில் ஆர்ஜே அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து அனைவர் மனதையும் கவர்ந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

டிகை சாண்ட்ரா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ப்ரஜின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வரும் காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியை சொல்லவிருப்பதாக ப்ரஜின் சமீபத்தில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அதேபோல் நாளை காதலர் தினம் வருவதை அடுத்து இன்று தனது காதல் மனைவி சாண்ட்ரா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை ப்ரஜின் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ப்ரஜின் மற்றும் சாண்ட்ரா ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.