பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு தமிழ் நடிகை? பரபரப்பு தகவல் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான இது குறித்த இரண்டு புரமோ வீடியோக்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் எந்த புதிய திரைப்படங்களும் வெளிவரவில்லை. ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களும் மொக்கையாக இருப்பதால் ரசிகர்களின் பொழுதுபோக்கு இடம் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சரியான நேரத்தில் ஒளிபரப்பப்படுவதால் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ் நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ’ரேணிகுண்டா’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி அதன் பின் கோ, ரகளபுரம், அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனாசிங். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனின் போட்டியாளராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை கிரண் ரத்தோட், ஷிவானி நாராயணன், ஷாலு ஷம்மு, ரம்யா பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் சஞ்சனாசிங்கும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு நிதியுதவி செய்த பிரபல தமிழ் நடிகர்!

பிரபல தொலைக்காட்சி காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று திடீரென மரணம் அடைந்தது திரை உலகையே அதிர வைத்தது என்பது தெரிந்ததே. கடந்த 15 நாட்களாக உடல் நலம் இல்லாமல்

நயன்தாரா பட வில்லனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அமலாபால்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த படம் ஒன்றில் வில்லனாக நடித்த நடிகருக்கு நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 

கழுத்தில் கரன்சி மாலை, வீட்டில் குபேர பூஜை: வைரலாகும் வனிதா-பீட்டர்பால் புகைப்படம்

கடந்த சில நாட்களாகவே ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வந்த வனிதா விஜயகுமார் தற்போது கழுத்தில் கரன்ஸி மாலையுடன் கூடிய புகைப்படம்

அக்சராஹாசன் பாட்டியாக நடிக்கும் பின்னணி பாடகி: 10 வருடங்களுக்கு முன் கமல் படத்தில் நடித்தவர்!

கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் தமிழில் அஜித்தின் 'வேதாளம்' மற்றும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்

'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை? தாங்குவார்களா ரசிகர்கள்?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்