close
Choose your channels

நடிகை சரிதாவின் மகன்களா இவர்கள்..? அதிலும் ஒருவர் டாக்டரா? வைரல் புகைப்படங்கள்..!

Saturday, March 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் கடந்த 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சரிதா என்பதும் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘தப்புத்தாளங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி அதன் பின்னர் ’அவள் அப்படித்தான்’ ’வண்டிச்சக்கரம்’ ’மௌன கீதங்கள்’ ’நெற்றிக்கண்’ ’கீழ்வானம் சிவக்கும்’ ’தண்ணீர் தண்ணீர்’ ’புதுக்கவிதை’ ’அக்னி சாட்சி’ ’மலையூர் மம்பட்டியான்’ உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சரிதா, மலையாள நடிகர் முகேஷ் என்பவரை கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் ஸ்ரவன் மற்றும் இன்னொருவர் தேஜாஸ். இதில் ஸ்ரவன் என்பவர் மருத்துவராக உள்ளார் என்பதும் கொரோனா வைரஸ் நேரத்தில் பல உயிர்களை இவர் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்ரவன் ஐக்கிய அரபு நாட்டில் மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என்பதும் சரிதாவும் அவருடனே இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சரிதாவின் மகன் ஸ்ரவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மா மற்றும் சகோதரருடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. நடிகை சரிதாவின் மகன்களா இவர்கள்? அதிலும் ஒருவர் டாக்டரா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர்.

நடிகை சரிதா தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.