இப்படி இருப்பதே நல்லது… நடிகை சாயிஷா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,December 26 2021]

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை சாயிஷா ஜிம்மில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கொழுப்பில்லாமல் ஃபிட்டாக இருப்பதையே நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த நடனக் கலைஞராகவும் நடிகையாகவும் வலம்வரும் சாயிஷா “வனமகன்“ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து நடிகர் விஜய் சேதுபதியுடன “ஜுங்கா“ நடிகர் சூர்யாவுடன் “காப்பான்“ திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து நடிகர் ஆர்யாவுடன் “கஜினிகாந்த்“ திரைப்படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டு விரைவில் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது ஒரு அழகான பெண் குழந்தைக்கு தாயாக இருக்கும் நடிகை சாயிஷா பிரசவத்திற்குப் பிறகும் தனது உடலை படு ஃபிட்டாக வைத்துள்ளார். இதுகுறித்து பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை குறைப்பது எளிதல்ல. இருப்பினும் ஒருவர் சீராகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும. மேலும் நீங்கள் கூடுதல் எடையை இழப்பது தவிர்க்க முடியாதது.

மேலும் ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்த வழியில் அழகாக இருக்கிறாள். இருப்பினும் மெலிதாக இருப்பது நல்லது. ஏனெனில் இது கொழுப்பில் இருந்து நமது உறுப்புகளை விடுவிக்கிறது. ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு நேரம் எடுக்கும். ஒரு பிரபலத்தை பார்த்து உங்கள் இலக்கை அமைக்காதீர்கள். வெவ்வேறு உடல் ஆரோக்கிய நிலை உள்ளது. உடல்தகுதி என்பது எனக்கு ஒரு வாழ்க்கை முறை என்று பதிவிட்டு உள்ளார்.

குழந்தைப் பெற்ற பிறகும் நடிகை சாயிஷா தொடர்ந்து நடனப்பயிற்சி மற்றும் வொர்க் அவுட் விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது உடல்தகுதி குறித்து அவர் தெரிவித்த இந்தக் கருத்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து நடிகை சாயிஷா ஒரு கன்னடப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் என்றும் தகவல் கூறப்படுகிறது.

More News

ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட நடிகை தமன்னா… வைரல் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக

சூப்பர் சிங்கர் பிரகதியின் வேற லெவல் கிளாமர் புகைப்படங்கள் வைரல்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பிரகதி குருபிரசாத்தின் வேற லெவல் கிளாமர் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

என் அளவுக்கு அவங்களுக்கு தைரியம் இல்லை: தாமரை கூறியது யாரை?

என் அளவுக்கு தைரியம் அவருக்கு இல்லை என தாமரை தனது பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போட்டியாளர் குறித்து கூறியதுடன் கமல்ஹாசன் 'தெளிவாக அடித்து விட்டார்' என கமெண்ட் அடித்துள்ளார். 

அஜித்துக்கு விபத்து ஏற்பட்டது எதனால்? இயக்குனர் எச் வினோத் தகவல்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகள் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் அஜித்துக்கு விபத்து ஏற்பட்ட காட்சி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

நயன்தாராவின் அடுத்த படத்தில் சத்யராஜ்: வைரல் புகைப்படம்!

நயன்தாராவின் அடுத்த படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது சத்யராஜை வரவேற்று சூப்பர் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில்