அப்ப நான் 9வது தான் படிச்சுக்கிட்டு இருந்தேன்.. அஜித்துடன் முதல் பட அனுபவம் குறித்து பேசிய நடிகை..!

  • IndiaGlitz, [Saturday,April 29 2023]

அஜித் நடித்த முதல் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சங்கவி என்பதும் அதன் பிறகு அவர் பல விஜய் படங்களில் நடித்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’அமராவதி’ திரைப்படம் அஜித்தின் பிறந்த நாளான வரும் மே 1அம் தேதி டிஜிட்டலில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சங்கவி பேசிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜீத் நடித்த முதல் தமிழ் திரைப்படம் ’அமராவதி’ படத்தில் நாயகி ஆக என்னை இயக்குனர் செல்வா அழைத்தபோது நான் 9ஆம் வகுப்பு தான் படித்து முடித்து இருந்தேன். எனக்கு கேமராவை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? எந்த ஆங்கிளில் கேமராவை பார்க்க வேண்டும்? எப்படி நடிக்க வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது. என்னை வைத்து செல்வா உட்பட படக்குழுவினர் படாத பாடுபட்டனர். ஒரு வழியாக அந்த படத்தில் நான் நடித்து முடித்தேன். அந்த படத்தில் நடித்தது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

குறிப்பாக அஜித்தின் முதல் படம் தான் என்னுடைய முதல் படம் என்பதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். இந்த படம் தற்போது டிஜிட்டலில் வெளியாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

கவர்ச்சி நடிகை போல் மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்த மாடல் அழகி மரணம்..!

பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகை போல் மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்த இளம் மாடல் அழகி திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வனிதாவை திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர் பால் திடீர் மரணம்.. என்ன ஆச்சு.?

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர் பால் திடீரென உடல் நல குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பறந்து பறந்து ஸ்டண்ட் போடும் திஷா பதானி, 'கங்குவா' படத்திற்காகவா? வேற லெவல் வீடியோ..!

சூர்யாவின் 42 வது திரைப்படம் 'கங்குவா' என்ற திரைப்படத்தில் நாயகி ஆக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி பறந்து பறந்து ஸ்டாண்ட் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

விஜய் குருமூர்த்தி.. ஒரு லட்சம் கோடிக்கு சொந்தக்காரன்: 'பிச்சைக்காரன் 2' டிரைலர்

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தன

அந்தரத்தில் பறந்து ஆக்சன் காட்சியில் சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை சமந்தா அந்தரத்தில் பறந்து ஆக்சன் காட்சிகளில் நடித்த காட்சிகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது.