'என் புஜ்ஜி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்' பிரபல நடிகையின் நெகிழ்ச்சியான பதிவு!

  • IndiaGlitz, [Sunday,October 09 2022]

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் ஒரு மணி நேரத்தில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் தனது சகோதரர் கலந்துள்ளதாக பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது என்பதும் போட்டியாளர்களின் அறிமுகம் இன்று நடைபெற உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஷிவின் கணேசன், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி ஆகிய இருபது பேர் கலந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மணிகண்டன் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் என்பதும் இவர் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது சகோதரர் மணிகண்டன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: என் சகோதரர் மணிகண்டன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி. என் சகோதரரை நான் புஜ்ஜி என்று அழைப்பது தான் வழக்கம். என் தந்தையின் மறு உருவமான எனது சகோதரரை சில நாட்கள் நான் மிஸ் செய்வேன். ஆனால் அவர் இந்த நிகழ்ச்ச்யில் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எனது சகோதரர் மணிகண்டனுக்கு வாய்ப்பு வழங்கிய விஜய் டிவிக்கு நன்றி. தயவுசெய்து என் சகோதரர் புஜ்ஜியை ஆதரியுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

திடீரென ரஜினியை சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சரத்குமார் திடீரென சந்தித்து உள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

மஞ்சள் நிற தேவதை பூமிக்கு வந்துவிட்டதா? சினேகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்!

மஞ்சள் நிற காஸ்ட்யூமில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மஞ்சள் நிற தேவதை பூமிக்கு வந்து விட்டதா? என கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்திருப்பது

தனுஷ்-ஐஸ்வர்யா இணைந்துவிட்டார்களா? கஸ்தூரிராஜா கூறிய பதில்!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் இருவரும் குழந்தைகளுக்காக இணைந்து விட்டதாக

'பொன்னியின் செல்வன்' வெற்றி எதிரொலி: அடுத்தடுத்து வெளியாகும் சமுத்திரகுமாரியின் 2 படங்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த இளம் நடிகை!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான