close
Choose your channels

எல்லைகளை தாண்டி மெர்சலுக்கு குவியும் பாராட்டுக்கள்

Friday, October 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் கதை ஒருசில பழைய படங்களின் காப்பி என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் விஜய் ரசிகர்கள் மற்றும் நடுநிலை ரசிகர்களின் பேராதரவால் திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆகி வருகிறது.

கோலிவுட் திரையுலக பிரபலங்கள் இந்த படத்திற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் 'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு தமிழக அரசியல்வாதிகள் ஒருசிலர் எதிர்ப்பும் ஆதரவும் மாறிமாறி தெரிவித்து வருவது இந்த படத்திற்கு கிடைத்த இலவச விளம்பரமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகிய 'அர்ஜூன் ரெட்டி' என்ற படத்தின் நாயகியும், தமிழில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் '100% காதல்' படத்தின் நாயகியுயாக நடித்து வருபவருமான ஷாலினி பாண்டே மெர்சலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 'மெர்சல்' படம் பார்த்தேன். என்ன ஒரு விஷுவல் உருவாக்கம், விஜய் சார் திரையில் அனைவரையும் அசர வைத்துவிட்டார். இயக்குனர் அட்லிக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்று 'மெர்சல்' என்று தெரிவித்துள்ளார். 'மெர்சல்' படத்திற்கு தமிழகத்தையும் தாண்டி பாராட்டுக்கள் குவிந்து வருவது படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.