நடிகை ஸ்ரேயா வீட்டில் விசேஷம்: ரசிகர்கள் வாழ்த்து!

  • IndiaGlitz, [Thursday,November 05 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’சிவாஜி’ தளபதி விஜய்யுடன் ’அழகிய தமிழ் மகன்’ விக்ரமுடன் ’கந்தசாமி’ உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தற்போது இந்த காதல் ஜோடி ஸ்பெயின் நாட்டில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகை ஸ்ரேயா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளவர் என்றும் தனது காதல் கணவருடன் இணைந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் அவரது வீட்டில் விசேஷம் என்று தெரியவருகிறது. நம்மூரில் பெண்கள் தங்கள் கணவர்கள் நீண்ட ஆயுளோடு இருக்க வரலட்சுமி நோன்பு இருப்பது போல வட இந்தியாவில் ’கர்வா சவுத்’ என்ற விரதம் இருப்பார்கள். அந்த விரதத்தை தான் ஸ்ரேயா இருந்ததாகவும் இது குறித்த புகைப்படங்களை தான் அவர் பதிவு செய்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஸ்ரேயாவுக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தற்போது நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் ’கமனம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

'வலிமை' படத்தில் அஜித் கேரக்டர்: டிரெண்டான ஹேஷ்டேக்

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் நேற்று முதல் அஜித் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்ற செய்தி வந்ததையும் பார்த்தோம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேனா? இந்திராஜா அளித்த விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இரண்டு வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் 

ரணகளத்துக்கு நடுவே இணையத்தில் வைரலாகும் பாரக் ஒபாமா Shot!

அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதற்கான ரணகளத்தில் அமெரிக்காவே அல்லாடி வருகிறது. இந்நிலையில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா

ரஜினிக்கு அரசியலைவிட உடல்நலம் ரொம்ப முக்கியம்: கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன்

விபிஎப் கட்டணத்தை ஏற்கிறோம், ஆனால் ஒரு நிபந்தனை: திரையரங்கு உரிமையாளர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி