close
Choose your channels

16 வயதில் நடிகை ஸ்ரேயா எப்படி இருந்தார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

Tuesday, July 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ரேயாசரண் தான் 16 வயதில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்பதும் அதில் முதல் முதலாக சேலை கட்டிய புகைப்படம் ஒன்று இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தவர் ஸ்ரேயா சரண். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ தளபதி விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ உள்பட பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா சரண் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பாக அவர் தனது கணவருடன் இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் அவர் 16 வயதாக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் இரண்டை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களில் ஒன்று அவர் முதன்முதலாக சேலை அணிந்த புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.