close
Choose your channels

பேஷனில் திடீர் மாற்றம்? ஆச்சர்யமூட்டும் நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள்!

Thursday, November 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் பேஷன் விஷயத்தில் படு வித்தியாசமானவர். அதிலும் கருப்புநிற உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதிலும் அதில் வித்தியாசத்தைக் காட்டுவதிலும் ஆர்வம் கொண்டிருப்பார்.

இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் திடீரென்று மரகத பச்சை நிறத்திலான புடவையை அணிந்து அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “ஏழாம் அறிவு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். இதையடுத்து “3“, “புலி“, “வேதாளம்“ போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். அதேபோல தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

மேலும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது காதலருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தற்போது பச்சை நிறத்திலான பட்டு மற்றும் கோல்டன் ஜரி வொர்க் செய்த புடவையை அணிந்து படு அச்சதலான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.