'அழகே பொறாமைப்படும் அழகு': சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,October 04 2022]

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு பிரசன்னாவின் கமெண்ட் என்ன தெரியுமா?

கடந்த 2000 ஆண்டு ’என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சினேகா அதன்பின் ’ஆனந்தம்’ ’புன்னகை தேசம்’ ’விரும்புகிறேன்’’ ’ஏப்ரல் மாதத்தில்’ ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ ’ஆட்டோகிராப்’ ’’வசீகரா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ படத்தில் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததாக பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய நிலையிலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வபோது பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சினேகா பிங்க் மாடர்ன் டிரஸ் காஸ்ட்யூமில் பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களுக்கு அவரது கணவர் பிரசன்னா ’அழகி’ என்று கமென்ட் பதிவு செய்துள்ளார்.

’அழகே பொறாமைப்படும் அழகு’ என்பது போன்ற கமெண்ட்ஸ்களை ரசிகர்களும் பதிவாகி வருகின்றனர். 40 வயது ஆகியும் இளம் டீன்ஏஜ் நடிகைகளுக்கு இணையாக இன்னும் அழகாக இருக்கும் சினேகாவின் இந்த புகைப்படங்களுக்கு சுமார் ஒரு லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அச்சு அசலாக குந்தவையாக மாறிய பிக்பாஸ் நடிகை: பாராட்டு தெரிவித்த த்ரிஷா!

பிக்பாஸ் நடிகை ஒருவர் அச்சு அசலாக குந்தவை கெட்டப்பில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு

ரிஷப் பண்ட் பிறந்த நாளில் ஊர்வசி ரெளட்டாலா வெளியிட்ட வீடியோ: மீண்டும் எழுந்த சர்ச்சை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரிஷப் பண்ட் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது முன்னாள் காதலியான நடிகை ஊர்வசி ரெளட்டாலா தனது இன்ஸ்டாகிராம்

தமிழில் நிகழ்த்திய மாயாஜாலத்தை இந்தியிலும் ஏற்படுத்திய இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஹிர்த்திக் ரோஷன் - சயீப் அலி கான் ஆகியோர் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து, இந்தியில் வெளியான 'விக்ரம் வேதா'  படத்திற்கு ரசிகர்களிடம் பெரும்

செம டஃப்பா இருக்கும் போலயே…. ஸ்ரீதேவியின் இளைய மகள் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரின் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது.. மனைவியின் முத்தத்தை வர்ணித்த ரவீந்தர்!

சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது என தயாரிப்பாளர் ரவீந்திரன் தனக்கு தனது மனைவி கொடுத்த முத்தம் குறித்து பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.