பிரபல கவர்ச்சி நடிகையின் தாயார் காலமானார்

  • IndiaGlitz, [Friday,November 10 2017]

'குசேலன்', 'குரு என் ஆளு', 'ஒன்பதுல குரு' உள்பட பல படங்களில் நடித்தவரும், 'கனிமொழி' என்ற படத்தை தயாரித்தவர் நடிகை சோனா. இவருடைய தாயார் இன்று அதிகாலை காலமானார். இந்த தகவலை நடிகை சோனா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். 

இதுகுறித்து நடிகை சோனா தனது சமூகவலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: இன்று அதிகாலை 12.40 மணிக்கு என் அன்புக்குரிய அம்மா காலமானார். அவரால் தான் எனக்கு பலம், தைரியம் கிடைத்தது. கடினமான காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு சொல்லி கொடுத்து எனக்கு ஆறுதலாக இருந்தவர் என் அம்மா. அவருடைய அன்பு எப்போது என் நினைவில் இருக்கும்' என்று அவர் பதிவு செய்துள்ளார்.

அம்மாவை இழந்து வாடும் சோனாவுக்கு திரையுலகினர்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More News

'மெர்சலுக்கு' அடுத்து தினகரனை விளம்பரம் செய்கிறது மத்திய அரசு: மயில்சாமி

தற்போது மத்திய அரசே அனைத்து விஷயங்களையும் தானே விளம்பரம் செய்து வருவதாகவும், மெர்சல் விஜய்யை இந்தியா முழுவதும் விளம்பரம் செய்தது போல்

அனிதா பிறந்த மாவட்டத்திற்கு விஜய்சேதுபதி கொடுத்த ரூ.50 லட்சம் நன்கொடை

நடிகர் விஜய்சேதுபதி தனியார் சேமியா நிறுவனம் ஒன்றின் லோகோவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் நன்கொடை தருவதாக அறிவித்துள்ளார்

நடிகை நமீதா திருமணம்: உறுதி செய்த பிக்பாஸ் ரைசா

பிரபல நடிகையும், பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவருமான நமீதா, அவருடைய காதலரை திருமணம் செய்யவுள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு பங்கேற்பாளர்களான ரைசா தெரிவித்துள்ளார்.

உணவு சரியில்லை என்று கூறிய வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கடைக்காரர்

தெருவோரத்தில் தள்ளுவண்டியில் உணவு தயாரித்து விற்பனை செய்யும் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவர் உணவு சரியில்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து கொதிக்கும் எண்ணெயை துரத்தி துரத்தி ஊற்றியுள்ள சம்பவம்

இயக்குனர் ஹரி படங்களின் ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் திடீர் மரணம்

கோலிவுட் திரையுலகின் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் இன்று மதியம் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார்.