close
Choose your channels

கின்னஸ் சாதனை செய்த ஏ.ஆர்.முருகதாஸ் நாயகி

Friday, March 11, 2016 • தமிழ் Comments
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' நாயகிகளில் ஒருவரும் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'அகிரா' படத்தின் நாயகியுமான சோனாக்ஷி சின்ஹா, சமீபத்தில் கின்னஸ் சாதனை ஒன்றை செய்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நேற்று முன் தினம் உலக மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் டெல்லியில் உலகிலேயே அதிக பெண்கள் கலந்து கொண்டு நெயில்பாலீஷ் போடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பிரபல காஸ்மெட்டிக் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திரையுலகம் உள்பட பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்கும் பெண்கள் மிக அதிக அளவில் கலந்து கொண்டனர்.
இறுதியில் இந்த நிகழ்ச்சி உலகிலேயே ஒரே இடத்தில் மிக அதிக பெண்கள் கலந்து கொண்டு நெயில் பாலீஷ் போட்டதாக அறிவிக்கப்பட்டு இதில் கலந்து கொண்ட அனைவரது பெயர்களும் கின்னஸில் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் 'அகிரா' நாயகி சோனாக்ஷி சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz