ஊதா கலரு ரிப்பன் நடிகையின் மேக்கப் இல்லாத வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,March 02 2021]

இன்றுவரை தனது அலட்டிக் கொள்ளாத எளிமையான நடிப்பின் மூலம் தமிழ் இளசுகளின் கனவுகன்னியாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு “வெள்ளைக்கார துரை“, “ஜீவா“, “காக்கிச் சட்டை”, “ஈட்டி”, “பென்சில்“ போன்ற பல படங்களில் நடித்து விட்டார்.

ஆனாலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து  “உதா கலரு ரிப்பன்” பாடலுக்கு நடிகை ஸ்ரீ திவ்யா கொடுத்த க்யூட் ரியாக்ஷனுக்கு இன்றும் தமிழ் இளைஞர்கள் அடிமையாகவே இருக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதாவது தலைக் காட்டும் நடிகை ஸ்ரீ திவ்யா தற்போது தொடர்ந்து மேக்கப்பே இல்லாத தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேக்கப் மீது அதிகம் ஆர்வம் காட்டாத இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் தமிழ் ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தெலுங்கு சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீ திவ்யா அதற்கு பின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து தெலுங்கு வெள்ளித் திரையில் முன்னணி இடத்தைப் பிடித்தார். தற்போது தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர் முதல் முறையாக நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து மலையாளத்திலும் கால் பதிக்க இருக்கிறார்.

மேலும் தமிழில், நடிகர் அதர்வாவுடன் இவர் நடித்த “ஒத்தைக்கு ஒத்த” திரைப்படம் தற்போது ரிலீசுக்கு காத்திருக்கிறது. இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக இருக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா  தற்போது தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ள மேக்கப் இல்லாத புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

More News

ப்ரைடல் உடையில் பாலிவுட் “பேபி டால்“… நெட்டிசன்களை கவர்ந்த வைரல் புகைப்படம்!

ஒரு காலத்தில் அடல்ட் நட்சத்திரமாக அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து இருக்கிறார்.

அதிமுகவில் போட்டியிட விருப்பமனு கொடுத்த காமெடி நடிகர்-இயக்குனர்!

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர் மற்றும் இயக்குனர் அதிமுகவில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளது தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

கடன் வாங்க வேண்டிய தேவை எனக்கு இல்லை: 'த்ரிஷ்யம் 3' குறித்து ஜீத்துஜோசப்

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. முதல் பாகத்தைப் போலவே இந்த படத்தையும்

100 மில்லியன் பாலோயர்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர்… இந்திய கேப்டனின் புது சாதனை?

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களை பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைத் தட்டிச் சென்று இருக்கிறார் இந்தியக் கேப்டன் விராட் கோலி.

'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட்டாகி உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் குக்'கள் மற்றும் கோமாளிகள்