மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் சுகன்யா.. ஆனால் நடிகையாக அல்ல.. புதிய அவதாரம்..!

  • IndiaGlitz, [Wednesday,August 30 2023]

தமிழ் திரையுலகில் கடந்த 90 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த சுகன்யா நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆக இருப்பதாகவும் ஆனால் நடிகையாக இல்லாமல் பாடலாசிரியராக அவர் அறிமுகமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’புது நெல்லு புது நாற்று’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுகன்யா. அதன் பிறகு அவர் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உட்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சுகன்யா நடிகையாக மட்டுமின்றி பரதநாட்டிய கலைஞராக இருந்தார் என்பதும் அதுமட்டுமின்றி இசையமைப்பாளர் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் புதிதாக பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார்.

மலையாள படம் ஒன்றில் தமிழ் காட்சிகள் வரும் நிலையில் இயக்குனர் சுரேஷ் பாபு என்பவரும் இசையமைப்பாளர் சரத் என்பவரும் சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் இந்த பாடலை எழுதியுள்ளார்.

மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற தமிழ் பாடலான இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் எழுத வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருக்கு தனது நன்றிகள் என்று சுகன்யா கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'தளபதி 68' படத்தில் இருந்து வெளியேறினாரா ஜோதிகா? அவருக்கு பதில் இவரா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

பாவாடை தாவணியில் அழகு தேவதை.. விஜய் சேதுபதி மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்..!

நடிகர் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிய நிலையில், அதில் விஜய் சேதுபதியின் மகள் பாவாடை தாவணியில் அழகு

நடிகர் ஆர்யாவின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மாஸ் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது

பாராளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? அண்ணன் சத்தியநாராயண ராவ் தகவல்..!

ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் ரஜினியின் ஆதரவு யாருக்கு என ஊடகங்கள் கேள்வி எழுப்புவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த

அறிவிப்புக்கு முன்பே மிகப்பெரிய தொகைக்கு வியாபாரமான சிவகார்த்திகேயன் படம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாக முன்னரே அந்த படத்தின்  பாடல்கள் உரிமை மிகப் பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.