close
Choose your channels

தேர்தலில் போட்டியிட விரும்பும் மறைந்த சூப்பர் ஸ்டாரின் மனைவி

Monday, February 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னட சூப்பர் ஸ்டார் அம்பரீஷ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். நடிகராக மட்டுமின்றி அரசியலிலும் ஜொலித்த அம்பரீஷ் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா தொகுதியின் எம்பியாகவும் பணியாற்றினார்.

இந்த நிலையில் கணவர் போட்டியிட்ட அதே மாண்டியா தொகுதியில் தான் போட்டியிட விரும்புவதாக அம்பரீஷ் மனைவியும் நடிகையுமான சுமலதா விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் ரஜினிகாந்த் நடித்த 'முரட்டுக்காளை', 'கழுகு' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சுமலதா நேற்று மாண்டியாவில் உள்ள காலபைரவேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'என் கணவர் அம்பரீஷ் அரசியலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மாண்டியா மாவட்ட மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவரது அன்பை நான் தொடர விரும்புகிறேன். அம்பரீஷ், கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இதனால் நான் அந்தக் கட்சியில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். வேறு தொகுதியிலோ, வேறு கட்சி சார்பிலோ போட்டியிடும் எண்ணமில்லை' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.