முதல்வர் மகனை எதிர்த்து போட்டியிட்ட ரஜினி பட நடிகை வெற்றி!

  • IndiaGlitz, [Thursday,May 23 2019]

கர்நாடக மாநிலத்தில் அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றார்.

ரஜினிகாந்த் நடித்த 'முரட்டுக்காளை', 'கழுகு' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சுமலதா, மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவி ஆவார். இவர் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநில மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

இன்று வாக்கு எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் இருந்தே முன்னணியில் இருந்து வந்த நடிகை சுமலதா, சற்றுமுன் வெளியான தகவலின்படி 610 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுமலதா 1,22,924 வாக்குகளும், நிகில் குமாரசாமி 1,22,344 வாக்குகளும் பெற்றனர்.

More News

மோடியை வெறுக்க வேண்டாம், தேசத்தை நேசியுங்கள்: பிரபல நடிகர் கோரிக்கை

மோடியை வெறுப்பதற்கு பதில் தேசத்தை நேசியுங்கள் என்று பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனக்கு கிடைத்த சரியான அடி: தேர்தல் முடிவு குறித்து பிரபல நடிகர்

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார்.

பிரபல நடிகை வெற்றி! அமைச்சராகவும் வாய்ப்பு!

மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்த மாநிலங்களில் ஒன்று ஆந்திர பிரதேசம். இந்த மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேச கட்சி மக்களவை மற்றும் சட்டமன்றம் என இரண்டு தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது

இந்தியா மீண்டும் வென்றுவிட்டது. பிரதமர் மோடி டுவீட்

மக்களவை தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதலே பாஜகவுக்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு

திருமணத்திற்கு பின் ஆர்யா-சாயிஷா எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின் முதல்முறையாக ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.