close
Choose your channels

ஆன்மீக நிகழ்ச்சியில் நடனமாடிய நடிகை தமன்னா. க்யூட் வீடியோக்கள் வைரல்..!

Tuesday, April 1, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தமன்னா தனது வீட்டில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமன்னாவின் வீட்டில் சமீபத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆன்மீக உணர்வை அனுபவிக்கும் வகையில் இருந்த இந்த நிகழ்ச்சியில் பிங்க் உடையில் நடிகை தமன்னா கலந்து கொண்ட நிலையில், அவரது அலங்காரம் அழகை நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தமன்னாவின் நெருங்கிய தோழி நடிகை ரவீனா டண்டன் மகள் கலந்து கொண்டு, ஆடி பாடி ஆரத்தி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகி ஒருவர் பாடல் பாட, அவரது பாடலுக்கு ஏற்றவாறு நடிகை தமன்னா நடனம் ஆடிய காட்சியை பார்த்து, ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை தமன்னா தற்போது தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், ஒரு தெலுங்கு படத்திலும் ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல், "டார்லிங் பார்ட்னர்" வெப் சீரிஸில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment