close
Choose your channels

நடிகை தமன்னாவிற்கு இவ்ளோ திறமையா? ரசிகர்களே வியக்கும் வீடியோ!

Tuesday, January 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

தமிழ், தெலுங்கு, இந்தி எனப்பல மொழிகளில் முன்னணி நடிகை இருவரும் நடிகை தமன்னா வெளியிட்ட ஒரு வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் தற்போது கடும் ஆச்சர்யத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு “கேடி“ எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை தமன்னா. அதைத் தொடர்ந்து “சிறுத்தை“, “படிக்காதவன்“, “பையா“, “அயன்“, “தர்மதுரை“, “வீரம்“ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். அதேபோல தெலுங்கில் பிரம்மாண்ட திரைப்படமான “பாகுபலி“ திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் பிசியான நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா எப்போதும் டயட், வொர்க் அவுட் மற்றும் யோகா போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார். தற்போது அந்த வரிசையில் இன்னொன்றும் இணைந்திருக்கிறது. அதாவது இண்டோர் கேமான பவுலிங் விளையாடும் தமன்னா அந்த கேமிலுள்ள அனைத்து பின் (டார்கெட்)யும் அசத்தலாக வீழ்த்தி விளையாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.