எனக்கு ரொம்ப பிடித்தது இதுதான்… நடிகை தமன்னா பகிர்ந்த சுவாரசியமான தகவல்!

  • IndiaGlitz, [Thursday,June 08 2023]

தமிழ், தெலுங்கு, பாலிவுட் என்று இந்திய அளவில் பிரபல நட்சத்திரமாக இருந்துவரும் நடிகை தமன்னா பற்றிய தகவல்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் படு சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சிறிய வயதில் இருந்தே எனக்கு பிடித்த விஷயம் இதுதான் என்று கூறி நடிகை தமன்னா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை தமன்னா பாலிவுட்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரி 2” டீசர் வெளியாகி இருக்கிறது. நெட்ஃபிக்ஸ் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படம் இந்தியா முழுக்கவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்திலும் நடிகை தமன்னா இணைந்து நடித்து வருகிறார். இதைத்தவிர “அரண்மனை 2’, ‘காத்து கருப்பு’, ‘ஏன் என்றால் காதல் என்பேன்’ என்று பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல தெலுங்கில் ‘தட் இஸ் மகாலட்சுமி’, ‘போலோ சங்கர்’ திரைப்படத்திலும் இந்தியில் ‘போலோ சூடியன்’ திரைப்படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் பிசியாக நடித்துவரும் நடிகை தமன்னாவின் நடிப்பை ரசிகர்கள் எப்போதும் வியந்தே வருகின்றனர். இதேநேரத்தில் அவருடைய நடனமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் “தேவி” திரைப்படத்தில் இவர் அற்புதமான நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில் தற்போது தனது சிறிய வயது மேடை நிகழ்ச்சி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்ட நடிகை தமன்னா, சிறிய வயதில் இருந்தே பிடித்தமான பாடல்களுக்கு நடனமாடுவது போல பெரிய மகிழச்சி எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் கடற்கரையில் நின்றுகொண்டு நடனம் ஆடியபடியே இருக்கும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் ‘என்ஜாய் பண்ணுங்க…‘ என்று ஸ்மைலி எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.

More News

48 வயது ‘ஸ்லிம் பியூட்டி‘ நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பிறந்தநாள்… வாழ்த்தும் ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்னர் இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு வருகை தந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான 'ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்' சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து

லிவ்-இன் உறவு காதலியைக் கொன்று, குக்கரில் வேக வைத்த கொடூரக் காதலன்… அதிர்ச்சி சம்பவம்!

திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்- இன் உறவுமுறைகளில் வாழும் சில காதல் உறவுகள் தொடர்பான கொலைகள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்றன.

'லியோ' படப்பிடிப்பில் எஸ்.ஜே சூர்யா, பிரதீப் ரங்கராஜன்.. என்ன காரணம்..?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி இதுவா? இன்னும் ஒரு வாரத்தில் சியான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!

விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி ரிலீசுக்கு தயாராகி