close
Choose your channels

நயன்தாரா, ஹன்சிகாவை அடுத்து தமன்னாவுக்கு திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Thursday, November 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்த நிலையில் அடுத்த மாதம் இன்னொரு பிரபல நடிகையான ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2006ம் ஆண்டு ‘கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தமன்னா என்பதும் அதன் பின்னர் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் -இந்தியா நடிகையாக விளங்கி வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி ஓடிடியில் வெளியாகும் வெப்தொடர்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பை தொழிலதிபரை நடிகை தமன்னா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் மும்பை தொழிலதிபரின் காதலை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ உள்பட ஒருசில படங்களில் தமன்னா நடித்து வரும் நிலையில் திருமணத்திற்கு முன் அனைத்து படங்களின் படப்பிடிப்பையும் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.