சொல்லாமல் கொள்ளாமல் ரகசிய திருமணம்.. 2 நாள் கழித்து டாப்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Monday,March 25 2024]

நடிகை டாப்சி எந்தவித விளம்பரமும் இன்றி, அறிவிப்பும் இன்றி, தான் காதலித்த நபரை இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டாப்சி, அதன் பின் அஜித்தின் ’ஆரம்பம்’ ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 2’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் ஷாருக்கான் உடன் இணைந்து ’டன்க்கி’ என்ற படத்தில் நடித்து உள்ளார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நடிகை டாப்சி கடந்த சில ஆண்டுகளாக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. எந்தவித மீடியா வெளிச்சமும் இன்றி, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் இன்றி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இந்த திருமணம் நடந்ததாக தெரிகிறது

பாலிவுட் பிரமுகர் அனுராக் காஷ்யப் உட்பட ஒரு சில திரை உலக பிரபலங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது. திருமண கொண்டாட்டங்களில் போது நடந்த சில புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில் டாப்சியின் திருமண புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டாப்சிக்கு திருமணம் நடந்தது இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'ஆடுஜீவிதம்' ரிலீஸ் நேரத்தில் நிகழ்ந்த எதிர்பாராத மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடித்த 'ஆடு ஜீவிதம்' என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் வீட்டில் நிகழ்ந்த

'குழந்தைகள் முன்னேற்ற கழகம்': செந்தில் உடன் சேர்ந்து யோகிபாபு ஆரம்பித்த அரசியல் கட்சி..!

நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புதிது இல்லை என்பதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் தளபதி விஜய் வரை பலர் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளனர் என்பது தெரிந்தது.

லோகேஷ் கனகராஜ் படம் இயக்குவதை விட்டுவிடலாம்.. என்ன ஒரு கெமிஸ்ட்ரி.. 'இனிமேல்' ஆல்பம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை பிடித்துள்ள லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து நடித்த 'இனிமேல்' என்ற ஆல்பம் வெளியாகி உள்ள

தமிழகத்தின் ஸ்டார் தொகுதி: மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் - வினோத் பி.செல்வம்..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக

இப்படியெல்லாம் பேசினால் எப்படி பெண்கள் இந்த துறையில் சாதிப்பார்கள் ?

நான் வேறு ஒருவரின் பட்டத்தை ஒன்றும் பறிக்கவில்லை.என் திறமையை என்னால் முடிந்த வரை காட்டி தான் இந்த பட்டத்தைப் பெற்றேன்.இதற்காக பெருமை படுகிறேன்........