த்ரிஷா வீட்டில் நடந்த துக்கமான நிகழ்வு: முறைப்படி செய்யப்பட்ட ஈமச்சடங்கு!

  • IndiaGlitz, [Monday,April 18 2022]

பிரபல நடிகை த்ரிஷா வீட்டில் நடந்த துக்கமான நிகழ்வை அடுத்து முறைப்படி ஈமச்சடங்கு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

நடிகை த்ரிஷா விலங்குகளின் மேல் மிகவும் பிரியம் கொண்டவர் என்பதும் பீட்டா அமைப்பின் ஆதரவாளராகவும் அவர் இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி அவர் தனது வீட்டிலேயே பல நாய்க்குட்டிகளை யும் வளர்த்து வருகிறார். அவ்வாறு த்ரிஷா வளர்ந்து வரும் நாய்க்குட்டிகளில் ஒன்று நேற்று இறந்து விட்டதை அடுத்து அந்த நாய்க்கு இறுதி சடங்கை த்ரிஷா முறைப்படி செய்துள்ளார் .

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தபோது ’ஜானா என்ற கருப்பு நாய்க்குட்டி நேற்று இறந்து விட்டது. அதற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாய்க்குட்டி என்னுடைய தேவதை’ என்று கூறியுள்ளார். மேலும் இந்த நாய்க்குட்டியின் இறுதிச்சடங்கை செய்ய உதவிய புளுகிராச் அமைப்புக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

நடிகை த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'பீஸ்ட்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிய நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது. 

இணையத்தில் லீக் ஆகிவிட்டதா தனுஷின் 'திருச்சிற்றம்பலம்': அதிர்ச்சியில் படக்குழுவினர்!

தனுஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஒருசில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி விட்டதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மணிமேகலை வீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்: போலீஸில் புகார்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறும் மணிமேகலையின் வீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

'கேஜிஎப்' ராக்கி பாய்க்கு பிடிச்சது நெல்சன் படம் தானாம்!

விஜய் நடித்த 'பீஸ்ட்' மற்றும் யாஷ் நடித்த 'கேஜிஎப் 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த இரண்டு திரைப்படங்கள் குறித்து பல்வேறு விமர்சகர்கள் தங்களது

நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி அபாரம்: 'பீஸ்ட்' 5 நாள் வசூல் நிலவரம்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியான நிலையில் இந்தப் படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனங்கள் ஏராளமாக குவிந்தன.