நடிகை-அரசியல்வாதியின் கார் விபத்து: 3 பேர் பரிதாப பலி!

  • IndiaGlitz, [Sunday,November 29 2020]

பிரபல நடிகைக்கு சொந்தமான கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவரும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல கன்னட நடிகை உமாஸ்ரீ. இவர் அரசியலிலும் ஈடுபட்டு உள்ளார் என்பதும் கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் உமாஸ்ரீக்கு சொந்தமான கார் கர்நாடக மாநிலத்தில் உள்ள உப்பள்ளி என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரில் நடிகை உமாஸ்ரீ செல்லவில்லை என்பதும் டிரைவர் மட்டுமே சென்று கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த கார் பாண்டிவாடா என்ற பகுதியில் கார் சென்றபோது எதிரே வந்த டாக்டர் ஸ்மிதாகுட்டி என்பவரின் கார் மீது மோதியது. நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் டாக்டர் ஸ்மிதாகுட்டி காரில் இருந்த டாக்டர் ஸ்மிதாகுட்டி, அவரது தாயார் ஷோபா குட்டி மற்றும் டிரைவர் சந்திப் ஆகியோர் உயிரிழந்தனர். உமாஸ்ரீ கார் டிரைவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கர்நாடக மாநில போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதிக்கு சொந்தமான கார் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியாகிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

குறும்படம் போட்டு பாலாஜி ஆதரவாளரை வெளியேற்றினாரா கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று யார் வெளியேற்றப்படுகிறார் என்பது குறித்த தகவலை கூறும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் இருந்தாலும் யார் வெளியேற்றப்படுகிறார் என்ற காட்சிகள் அதில் இல்லை

அர்ச்சனாவின் குரூப், பாலாஜியின் குட்டி குரூப், நிஷாவுக்கு குட்டு: சாட்டையை சுழற்றிய கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஏகப்பட்ட பஞ்சாயத்தை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கமலஹாசன் லேசாக சாட்டையை சுழற்றி உள்ளதாகவே தெரிகிறது

அரசியல் குறித்த முக்கிய முடிவு: நவம்பர் 30ஐ ரஜினி தேர்வு செய்தது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த பல வருடமாக அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படாலும் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அவர் அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி தொடங்கி

சூர்யா-வெற்றிமாறன் 'வாடிவாசல்' டிராப்பா? கலைப்புலி எஸ்.தாணு விளக்கம்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக

அமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி: 'மாஸ்டர்' மாளவிகாவுக்கு ரசிகரின் கமெண்ட்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கலன்று ஓடிடி அல்லது திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் இல்லை