திட்டமிட்ட நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்த நடிகை: சித்ரா ரசிகர்கள் காரணமா?

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து நேரலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்த நடிகை ஒருவர் அந்த நிகழ்ச்சியைத் ரத்து செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் சக நடிகர்-நடிகைகள் மீளாத நிலையில் நடிகை வனிதா இது குறித்து கேள்வி பதில் நேரலை நிகழ்ச்சி ஒன்றை தனது யூட்யூபில் நடத்த திட்டமிட்டிருந்தார்.

இதுகுறித்த அறிவிப்பு ஒன்றும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவானது. நேற்று மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்க இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கடும் கண்டனங்களை சித்ராவின் ரசிகர்கள் தெரிவித்தனர். ஒரு நடிகையின் மரணத்தை வைத்து கூட பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்ற ரீதியில் பல்வேறு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து இந்த நிகழ்ச்சியை அவர் ரத்து செய்ததாக தெரிகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி குறித்த பதிவையும் அவர் நீக்கிவிட்டார். சித்ரா ரசிகர்களின் கடுமையான கண்டனத்தின் காரணமாகத்தான் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 

More News

பிக்பாஸ் பார்த்தால் குடும்பம் உருப்படாது: முதல்வர் பழனிசாமி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்

'அந்தாதூன்' ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகர்! இசையமைப்பாளரும் அறிவிப்பு!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் திட்டமிட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அமேசான் நிறுவனத்தால் மாஸ் நடிகர்களுக்கு ஆபத்தா? எச்சரிக்கும் திரையரங்குகள் சங்க தலைவர்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் 8 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்தது.

ரூ.26 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டங்கள்… தமிழகத்தை சீர்ப்படுத்தும் எடப்பாடியார்!!!

அரியலூர் மாவட்டத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வளர்ச்சித் திட்டப் பணிகளைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும்: வழக்கறிஞர் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது