close
Choose your channels

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமை சந்தித்த வனிதா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!

Saturday, January 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமை நடிகை வனிதா சந்தித்திருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் அசீம் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனின் டைட்டில் வின்னராக விக்ரமன் தான் வருவார் என பலர் கணித்திருந்த நிலையில் கமல்ஹாசனால் பலமுறை கண்டிக்கப்பட்ட அசீம், கமல்ஹாசனாலே டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இருப்பினும் அசீம் டைட்டில் வின்னருக்கு தகுதியானவர் தான் என்றும் சிலர் அவருக்கு ஆதரவாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தபோது ஒவ்வொரு எபிசோடையும் விமர்சனம் செய்து வந்தவர் நடிகை வனிதா என்பதை தெரிந்ததே. குறிப்பாக அசீமை அவர் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமை நடிகை வனிதா சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகிறது. இது குறித்து வனிதா, தனது ட்விட்டர் பக்கத்தில் ’நாங்கள் யாருக்கும் உதாரணமாக காட்ட இங்கு வரவில்லை, விதிகளை உடைக்க வந்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.