தயவுசெய்து இந்த படத்தை பாருங்கள்: வரலட்சுமி வேண்டுகோள்

கொரோனா குறித்து பல நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வரும் நிலையில் நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

அனைவரும் வீட்டில் இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் வீட்டில்தான் இருக்கிறேன். நான் ஒரு விஷயம் நான் சொல்ல விரும்புகிறேன். அந்த விஷயத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள். முதலில் கொரோனா வைரஸ் நமக்கு வராது என்று சிலர் அசட்டு தைரியத்தில் உள்ளனர். ஆனால் யாருக்கு வேண்டுமானாலும் கொரோனா வைரஸ் வரலாம். இதனை புரிந்து கொள்ளுங்கள்

இரண்டாவது வெளியில் சுற்ற வேண்டாம் என தடை உத்தரவு போடும் 27% பேர் மட்டும்தான் வீட்டில் இருந்தனர். மீதி அனைவரும் வெளியே தான் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இதன் ஆபத்து யாருக்கும் இன்னும் புரியவில்லை. சமீபத்தில் ‘Contagion’ என்ற ஒரு படம் வந்தது. அந்த படத்தை அனைவரும் தயவு செய்து பாருங்கள். அதில் வைரஸின் கொடூரம் குறித்தும், அது எவ்வாறு பரவுகிறது என்பது குறித்தும் விளக்கபப்ட்டிருக்கும். அதன் பிறகாவது தயவு செய்து திருந்துங்கள்

மேலும் இந்த நேரத்தில் வயதானவர்களுக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள். மருந்து மாத்திரைகள் அவர்களுக்கு வாங்கி கொடுங்கள். அடுத்ததாக இந்த மாதம் முழுவதும் யாருக்கும் வருமானம் இல்லாமல் இருக்கும். எனவே வாடகை வாங்குபவர்கள் இந்த மாதம் மட்டும் வாடகை வாங்காமல் அல்லது குறைந்த அளவு வாடகை வாங்கி உதவி செய்யுங்கள். பெரும்பாலும் வீட்டை விட்டு சொந்த ஊருக்கு போய் விட்டதால் வீடு சும்மாதான் இருக்கும்.

மேலும் யாரும் பயப்படவேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்குரிய கடைகள் அனைத்தும் திறந்து தான் இருக்கின்றது. எனவே அவசர அவசரமாக எல்லா பொருளையும் வாங்கி வீட்டில் குவிக்க வேண்டாம். கடைகள் திறந்திருக்கும் என்று அரசே கூறியுள்ளது. எனவே யாரும் பயப்பட வேண்டாம்

நமக்கு இப்போது இரண்டே இரண்டு சாய்ஸ்தான். அதில் ஒன்று எல்லோரும் வெளியில் நன்றாக சுற்றிவிட்டு இந்தியா முழுவதும் கொரோனா வைரசை பரப்பி, எண்ணவே முடியாத அளவுக்கு மரணத்தை உருவாக்குவது. இன்னொன்று ஒரே ஒரு மாதம் வீட்டில் உட்காருங்கள். அந்த ஒரு மாதத்திற்கு அப்புறம் அடுத்த மாதம் வைரஸ் பரபரப்பு நீங்கியவுடன் எல்லோரும் வேலைக்கு போய் நம்முடைய குடும்பத்தை காப்பாற்றி கொள்ளலாம். இந்த இரண்டு சாய்ஸ்களில் இரண்டாவது சாய்ஸை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி அனைவரும் வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள், யாரும் பயப்பட வேண்டாம்’ என்று நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்

More News

பெப்சிக்கு 'மாஸ்டர்' இயக்குனர் செய்த உதவி!

திரைப்படத்துறையினர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வேலையின்றி, வருமானம் இன்றி இருப்பதால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி

கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணம்: இந்திய தனியார் நிறுவனம் அசத்தல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர்

உத்திரப்பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் கொரோனா!!! 

உத்திரப்பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண்குழந்தைக்குக் கொரோனா எனப் பெயர்ச் சூட்டப்பட்டுள்ளது.

வருமானவரி தாக்கல் செய்ய, வரும் ஜுன் 30 வரை காலஅவகாசம்!!! மத்திய அரசு அறிவிப்பு!!!

கொரோனா எதிரொலியால் வருமானவரி, ஜி.எஸ்.டி தாக்கல் உள்ளிட்டவைகளில் சில சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா

தென்னிந்திய நடிகர் சங்க தனி அதிகாரியின் முக்கிய அறிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த சில மாதங்களாக தனி அதிகாரியின் பொறுப்பில் உள்ள நிலையில் சற்றுமுன் தனி அதிகாரி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: