close
Choose your channels

உங்க வேலையை முதலில் சரியா பாருங்க! பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி

Saturday, May 4, 2019 • தமிழ் Comments

குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியின் அம்பாசிடராக நடிகை வரலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் நடிகை வரலட்சும் கலந்து கொண்டு சமீபத்தில் தங்கம் வென்ற கோமதிக்கு பாராட்டு தெரிவித்தார்.

அப்போது ஒரு நிருபர், 'வெற்றி பெற்ற பின்ன்ரே அவரை பாராட்டுகின்றீர்கள், இதுபோன்ற திறமைசாலிகளை ஏன் முன்கூட்டியே அறிந்து அவர்களுக்கு உதவுவதில்லை' என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை வரலட்சுமி, 'பத்திரிகையாளர்களான நீங்களே வெற்றி பெற்ற பின்னர்தானே கோமதியை தலைப்பு செய்தியில் போட்டீர்கள். நீங்கள் தான் இதுபோன்ற திறமைசாலிகளை செய்தியின் மூலம் வெளியே கொண்டு வரவேண்டும். சினிமா ஆடியோ விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை நீங்கள் தான் இதற்கும் தர வேண்டும், அப்படி செய்தால்தான் திறமையானவர்கள் வெளியே தெரிவார்கள். எனவே உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள்' என்று  கூறினார்.

அதேபோல் இன்னொரு நிருபர் 'கோமதிக்கு நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்' என்று கேட்க அதற்கு வரலட்சுமி 'இதுவரை எதுவும் செய்யவில்லை இனிமேல் தான் செய்யணும் கூறிவிட்டு, 'என்னை கேள்வி கேட்கின்றீர்களே, நீங்கள் என்ன செய்தீர்கள் கோமதிக்கு என்று எதிர்கேள்வி கேட்டார். எதுவும் செய்யலைல்ல..அப்புறம் ஏன் என்னை மட்டும் கேள்வி கேட்கின்றீர்கள்? என்று மீண்டும் பதிலடி கொடுத்தார்.

Get Breaking News Alerts From IndiaGlitz